முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சஜித் இரட்டை வேடம் போடுபவர் அல்ல: இம்டியாஸ் பாக்கீர் மார்க்காரின் கருத்து

Courtesy: uky(ஊகி)

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தே இந்நாட்டின் சகல இன மக்களுக்குரிய தலைவர் எனவும் அவர் அரசியல் நலனுக்காக இரட்டை வேடம் போடும் தலைவர் அல்ல எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்டியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்துள்ளார்.

அதற்காக பல தரப்பட்ட கட்சியைச் சார்ந்தவர்களே அவருடைய வெற்றியை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்துள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அக்குறணை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஐ. ஐனுடீனின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாசவை ஆதரித்து அக்குறணை ஐ டெக் கல்வி நிலையத்தில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையில் அக்குறணை
ஐ டெக் கல்வி நிலையத்தில் தேர்தல் கூட்டம் இடம்பெற்றது.

ஒருங்கிணைக்கப்பட்ட தலைவர்கள்

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இம்டியாஸ் பாக்கீர் மார்க்கார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

“தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவர்
வி. இராதாகிருஸ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரிசாட் பதியுதீன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜயசிரி ஜயசேகர, சம்பிக்க ரணவக்க, சுமந்திரன் உள்ளிட்ட இன்னும் பல்வேறுபட்ட அணியைச் சார்ந்த கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டு பயணம் செல்லுகின்றோம்.

சஜித் இரட்டை வேடம் போடுபவர் அல்ல: இம்டியாஸ் பாக்கீர் மார்க்காரின் கருத்து | Sajith Is The Only Leader For All Races

இவ்வாறு ஒன்றிணைந்து செல்வதற்கான கருத்து வென்றால் கறுப்புச் சந்தை வெள்ளைச் சந்தை என்று வேறு பிரித்துப் பார்க்க முடியாது.

எல்லா வாக்குகளையும் ஒன்றிணைத்துக் கொண்டுதான் பயணம் செல்ல வேண்டும். எவ்வாறான பாதையில் செல்ல வேண்டும் என்ற தீர்மானம் எங்களுக்கிடையே ஒற்றுமை இருக்கின்றது. ஒரே புகையிரத தண்டவாளத்தில் செல்ல வேண்டும்.

பாய்ந்து தடம்புரண்டு செல்ல முடியாது. இந்நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயற்படுவதற்கான வேலைத் திட்டம் இருக்கிறது.

முதலில் நாட்டில் ஜனநாயகத் தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும். அடுத்து கட்சிக்குள் ஜனநாயகம் பேணப்பட வேண்டும்.

வெளியேறிய அரசியல்வாதிகள் 

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பெரு எண்ணிக்கையிலான மூத்த அரசியல்வாதிகள் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கட்சியை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். 

கரு ஜயசூரிய, காமினி லொக்குகே போன்ற நீண்டதொரு பெயர் பட்டியலைக் கொண்ட மூத்த மற்றும் நன்கு பழுத்த அரசியல்வாதிகள் வெளியே சென்றுள்ளார்கள்.

சஜித் இரட்டை வேடம் போடுபவர் அல்ல: இம்டியாஸ் பாக்கீர் மார்க்காரின் கருத்து | Sajith Is The Only Leader For All Races

ரணில் விக்ரமசிங்கவுடன் பயணம் செய்தால் நாம் வெற்றிபெற முடியாது என்ற வகையில் வெளியே சென்றவர்கள் அதிகம்.

ஆதலால் நாங்கள் பின்தங்கிய நிலையில் இருந்தோம்.
இந்த நிலையைக் கவனத்திற் கொண்டு கட்சியின் செயற்குழுவில் இருந்து கொண்டு நாம் நிறையப் போராட்டம் நடத்தினோம்.

அதற்காக அதில் இருந்து என்னை மூன்று தடவைகள் நீக்கினார்கள். கட்சியின் சிரேஸ்ட தவிசாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள். ஒதுங்கியிருந்தேன். 

புதிய கட்சி 

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கடைசியாக எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும். அதன் தலைவர் சஜித் பிரேமதாச வர வேண்டும் என்று தீர்மானம் எடுத்தோம். 

அது ஒரு ஜனநாயக ரீதியில் எடுத்த தீர்மானம் ஆகும். கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானத்திற்கு இணங்க உருவான கட்சிதான் ஐக்கிய மக்கள் சக்தி.

சஜித் இரட்டை வேடம் போடுபவர் அல்ல: இம்டியாஸ் பாக்கீர் மார்க்காரின் கருத்து | Sajith Is The Only Leader For All Races

சகல இன மக்களையும் அரவணைத்துக் கொண்டு பயணிக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான முற்போக்கு செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியிடமே காண முடிகிறது.

அந்த தீர்மானத்திற்கு எதிராக ரணில் விக்ரமசிங்க விருப்பமின்றி அகில விராஜ் காரியவசம், சாகல ரத்நாயக, ஜோன் அமரதுங்க ஆகியோர் ஒன்றிணைந்து யானைச் சின்னத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்கள்.

நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தோம். முதலாவது தேர்தலில் எங்களுக்கு ஸ்ரீ கொத்த அலுவலகம் இல்லை. பைல்கள் வைப்பதற்கு இடமில்லை. இவ்வாறான நெருக்கடியான நிலையில் பொதுத் தேர்தலில் 54 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.

பண்டாரநாயக போலல்ல

பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சமயம் ஏழு ஆசனங்களைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

நாங்கள் பெரு எண்ணிக்கையிலான ஆசனங்களைப் பெற்று எதிர் கட்சி ஆசனத்தில் அமர்ந்தோம்.

1994களில் இருந்து ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள முடியாது இருந்தது. அப்படியிருந்த கட்சி அல்ல இது. 

ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் எல்லோரும் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள். வஸீர் முக்தார் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பெரு எண்ணிக்கையிலானவர்கள் எம்மோடு இணைந்துள்ளார்கள். இது எங்களுக்கு பெருமை தரும் விடயமாகும்.

சஜித் இரட்டை வேடம் போடுபவர் அல்ல: இம்டியாஸ் பாக்கீர் மார்க்காரின் கருத்து | Sajith Is The Only Leader For All Races

அதேபோல் என்னோடு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பேராசிரிரியர் ரோஹன லக்சுமன் எம்மோடு இணைந்துள்ளார். அன்று நான் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் போது அவர் கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்தார்.

அவர் நான் ஐக்கிய தேசிய கட்சியில் இருப்பதைப் பார்த்து கேலி கிண்டல் செய்வார். இப்போது அந்த நிலைமை மாறி விட்டது. டலஸ் அழகப்பெரும், பேராசிரியர் சரத் விக்கிரம ரட்ன, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உள்ளிட்ட இன்னும் எத்தினையோ பேர் நாட்டில் ஜனநாயக ரீதியிலான சிறந்த ஆட்சி அமைக்கக் கூடியவர் சஜித் பிரேமதாச என்று எல்லா தரப்பினர்களும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

இப்படியான நல்லதொரு மாற்றம் எழுந்துள்ளது. சஜித் பிரேமதாச தோல்வியடையப் போவதில்லை. போலியான முகப்புத்தத்தின் தகவல்களை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.