சவாலை ஏற்காது தப்பியோடிய தலைவர்களுக்கு மத்தியில், சவாலை ஏற்று மக்களை
பாதுகாத்த தலைவர் பக்கமே நாம் நிற்கின்றோம் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மலையகத்தை இனி காங்கிரஸ்தான் ஆளும், வேறு எவரும் இங்கு இருக்க முடியாது எனவும்
அவர் பகிரங்கமாக கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்ரமசிங்கவை
ஆதரித்து, பூண்டுலோயா நகர மைதானத்தில் நேற்று 17.09.2024 நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மக்கள் சேவை
“அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எனக்கும், ரமேஷ் அண்ணனுக்கும் இடையில் 15 வருடகாலம் உறவு உள்ளது.
உங்களுக்கு
எல்லாம் கொத்மலை ரமேஷை தெரியுமா? ரமேஷ் அண்ணன் கொத்மலை ரமேஷாக
இருக்கும்போதுதான் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
மக்கள் சேவைமூலம் அவர் மக்கள்
மனங்களை வென்றுள்ளார். எனது தந்தை இன்று இருந்திருந்தால் இதனைக் கண்டு
மகிழ்ச்சியடைந்திருப்பார்.
அடிப்படை சம்பளம்
இந்த பூண்டுலோயா மண்ணில்தான் எமது முதலாவது அரசியல்
மேடை பேச்சு இடம்பெற்றது.
எனது தந்தை இறந்திருந்தாலும், மக்கள் உறவுகளை எனக்கு தந்துவிட்டே
சென்றுள்ளார்.
அந்த மக்கள் பலம் எனக்கு போதும்.
இன்று சம்பளம் பற்றி பலர் கதைக்கின்றனர், அடிப்படை நாள் சம்பளம்1350
ரூபா என்ற அடிப்படையில் தற்போது சம்பளம் கணிக்கப்படுகின்றது.
அடுத்த பத்தாம்
திகதியாகும்போது அதிகரிக்கப்பட்ட சம்பளம்தான் எமது தொழிலாளர்களுக்கு
கிடைக்கப்பெறும்” என்றார்.
மேவும், பதுளை மாவட்டத்திலும் பல்வேறு பிரதேசங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார கூட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர்களான வடிவேல்
சுரேஷ், அரவிந்த குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.
பதுளை மாவட்டத்தில் பல்வேறு தோட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று இவர்கள் பிரச்சாரங்களில்
ஈடுபட்டுள்ளனர்.