ராஜபக்சக்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் உலகில் எங்கும் இருப்பதாக நிரூபித்தால் உலகில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் முன்னிலையாகத் தயார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ச(namal rajapaksa) சவால் விடுத்தார்.
ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இரத்தினபுரி நகரில் நேற்று (17) பிற்பகல் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச தலைமையில் பொதுக்கூட்டம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தலைமையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கோப்பு மூட்டைகளை மறைக்காமல் முன்வைக்குமாறும், முடிந்தால் ராஜபக்சாக்கள் முறைகேடாகச் சம்பாதித்ததாகக் தெரிவிக்கும் சொத்துக்களை வெளியிடுமாறும் அவர் சவால் விடுத்தார்.