மலையக மக்களை வடக்கில் குடியேற்ற வேண்டும்.கிழக்கில் அவர்களுக்கு இடமில்லை என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைமை காரியாலயத்தில் இன்று(13) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக மக்களது வாழ்வாதாரம் முக்கியமானதா அல்லது தேயிலை தோட்டங்கள்
முக்கியமானதா என்பதை அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
ஜனாதிபதியின் செயற்பாடு
முஸ்லீம்
கட்சிகள் தற்போது வாக்குகள் குறைந்த வங்குரோத்து கட்சிகளாக வலம்
வருகின்றன.இதற்கு காரணம் தேசிய மக்கள் கட்சியின் செல்வாக்கும் ஜனாதிபதி
அநுரவின் செயற்பாடுகளுமாகும்.

இதற்கு உதாரணமாக கல்முனை தேர்தல் தொகுதியில்
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு ஜனாதிபதி அனுரவின் கட்சி
வெற்றி பெற்றதனை கூற முடியும்.இது வரலாற்றில் பெரும் நிகழ்வாகும்.
2004 ஆண்டு இம்மாவட்டம் சுனாமியினால்
பாதிக்கப்பட்ட போது இந்த மாவட்ட மக்களுக்கு ரவூப் ஹக்கீம் என்பவர் எந்த
உதவியையும் செய்யவில்லை.
மக்களின் வாழ்வாதாரம்
அத்துடன் மலையக மக்களை வட கிழக்கில் குடியேற்ற
வேண்டும் என கூறப்படுவது ஏற்கக்கூடிய வாதம் அல்ல.வேண்டும் என்றால் வட
மாகாணத்தில் மாத்திரம் சுமந்திரன் மனோ கணேசன் கூறுவது போன்று
குடியேற்றலாம்.

தேயிலை தோட்ட வேலைகளுக்காக தான் இந்தியாவில் இருந்து மலையக
மக்களை இலங்கைக்கு அழைத்து வந்தார்கள்.
எனவே தான் அரசாங்கம் அந்த மக்களின்
வாழ்வாதாரம் முக்கியமானதா அல்லது தேயிலை தோட்டங்கள் முக்கியமானதா என்பதை
அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

