முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதுளை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றோர் : வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பதுளை (Badulla) மாவட்டத்தில் 705, 772 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் கா.காந்தீபன் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கன,
வியலுவ, பசறை, பதுளை, ஹாலிஎல, ஊவாபரணகம, வெலிமடை, பண்டாரவளை மற்றும்
அப்புத்தளை ஆகிய தேர்தல் தொகுதிகளில் இருந்து வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 42061 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு
தகுதி பெற்றிருந்தனர்.

வாக்கெடுப்பு நிலையங்கள் 

இம் மாவட்டத்தில் உள்ள 567 கிராம சேவையாளர்
பிரிவுகளில் 523 தேர்தல் பிரிவுகள் காணப்படுகின்றன. வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 530 வாக்கெடுப்பு நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றோர் : வெளியான தகவல் | 705772 Eligible To Vote In Badulla District

வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் உட்பட ஏனைய ஆவணங்களை
விநியோகிக்கும் மத்திய நிலையமாக பதுளை மத்திய மகா வித்தியாலயம்
செயற்படுகின்றது.

இன்றைய தினம் (20) காலை 6.30 மணி தொடக்கம் வாக்களிப்பு
நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

10 ஆயிரம் அரச ஊழியர்கள் 

வாக்கெண்ணும் நிலையங்களாக பதுளை மத்திய மகா வித்தியாலயம், பதுளை விசாகா
வித்தியாலயம் என்பன செயற்படவுள்ளதுடன் பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் 55 வாக்கெண்ணும் நிலையங்களும், விசாகா
வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவில் 29 வாக்கெண்ணும் நிலையங்களும் இப்பணிக்காக
ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றோர் : வெளியான தகவல் | 705772 Eligible To Vote In Badulla District

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக இம்முறை பதுளை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம்
அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்
பதுளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இருந்து அறிவிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி தேர்தலின் தெரிவத்தாட்சி அதிகாரியாக மாவட்ட செயலாளர் பண்டுக்க ஸ்ரீ
பிரபாத் அபேவர்தனவும், உதவி தெரிவத்தாட்சி அதிகாரியாக உதவி தேர்தல் ஆணையாளர்
கா. காந்தீபனும் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.