முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான
அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர்
அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (20) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “முல்லைத்தீவு மாவட்டத்தில் 89, 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள
நிலையில் 137 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான முக்கிய ஏற்பாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு
மாவட்டத்தில் தேர்தலுக்கான மிக முக்கிய ஏற்பாடாகிய வாக்களிப்பு நிலையங்களுக்கு
வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு அணுப்புகின்ற பணி நிறைவடைந்ததுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி | Preparations For The Presidential Election Mullait

இன்று காலை முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலத்திலிருந்து 137 வாக்களிப்பு
நிலையங்களுக்கு அதற்கு பொறுப்பாக இருக்கின்ற சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்
தலைமையில் வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு அணுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

குறித்த தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்கும் பணியிலே 38 வலயங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு பொறுப்பாக இருக்கின்ற தெரிவு அத்தியட்சக அலுவலர்கள் இந்த கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி | Preparations For The Presidential Election Mullait

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு யானைகள் தொல்லை இருப்பதால் அதை
எதிர்கொள்ளக்கூடிய விடயம் தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.

இந்த
பணியில் குறிப்பாக கிராம அலுவலர்கள் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் பொறுப்பாகவுள்ள
பிரதேச செயலாளர்கள் இதனை கவனிக்கவுள்ளார்கள்.” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்