மிக விரைவாக பொதுத்தேர்தல் ஒன்றுக்குத் தயாராக இருக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து தெரிவாகவுள்ள புதிய ஜனாதிபதி, மிக விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றுக்கு உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுத் தேர்தல்
இந்நிலையில், பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நிதியைத் தேடிக் கொள்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான தயார் நிலையில் இருக்குமாறும் சகல மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

