முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவிற்கு சுமந்திரனின் வாழ்த்து செய்தி! தமிழர்களுக்கு கூறியுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆலோசனையின் பேரில் மற்றவர்களை நிராகரித்து சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டிய வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு  நன்றி

நாட்டில் நடைபெற்று முடிந்த 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையிலுள்ளார்.

அநுரவிற்கு சுமந்திரனின் வாழ்த்து செய்தி! தமிழர்களுக்கு கூறியுள்ள தகவல் | New President Anura Kumara Dissanayaka

இந்நிலையில் அவருக்கு எதிராக தேர்தல் பிரசார களத்தில் ஈடுபட்டவர்களும் தமது தரப்பினரின் தோல்வியை ஏற்றுக்கொண்டு அநுரவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கமைய, எம்.ஏ.சுமந்திரன், இன அல்லது மத பேரினவாதத்தில் தங்கியிருக்காமல் வெற்றியை அடைந்ததற்காக திசாநாயக்கவை  பாராட்டினார், இது அவரது பிரசாரத்தை வேறுபடுத்திய ஒரு முக்கிய காரணியாகும் என கூறியுள்ளார்.

அநுரவிற்கு வாழ்த்து

இன, மத வெறிக்கு இடமளிக்காமல் அபார வெற்றி பெற்றதற்கு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். 

அநுரவிற்கு சுமந்திரனின் வாழ்த்து செய்தி! தமிழர்களுக்கு கூறியுள்ள தகவல் | New President Anura Kumara Dissanayaka

இதேவேளை 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அநுரகுமார புதிய ஜனாதிபதியாக வருவார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

ஜனநாயகம் மற்றும் நல்லெண்ண உணர்வுடன், நான் எனது நண்பரை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்