இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayaka) இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி (Mizukoshi Hideaki) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதில் அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற அவர் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தமது தலைவரை தெரிவு செய்வதில் இலங்கையின் ஜனநாயக செயற்பாட்டில் தீவிரமாக பங்குபற்றியமைக்காக நாம் வாழ்த்த விரும்புகிறோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற தேர்தல்
அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை மக்களின் தலைமையிலான புதிய நிர்வாகத்துடன் பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை அடைவதற்கும் எமது வலுவான உறவை அடைவதற்கும் ஜப்பான் தயாராக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும், ஜப்பானிலும் தலைவர்கள் மாறினாலும் எங்களுடைய நட்பு வலுப்பெற்றது என்பது வரலாறு என தெரிவித்த அவர் இலங்கையில் இம்முறை நடைபெற்ற தேர்தல், கடந்த காலத்தைப் போலவே, புதிய பக்கங்களிலும் புதுப்பிக்கப்பட்ட நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் கதைகளால் நிரப்பப்படும் வகையில் எமது உறவின் பக்கம் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம் என் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.