முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐக்கிய தேசியக் கட்சி – சஜித் கூட்டணி தொடர்பில் தொடரும் கலந்துரையாடல்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன், ஐக்கிய மக்கள் கூட்டணி இணைந்து போட்டியிடுவது தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த போதிலும், இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜித சேனாரத்ன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் ஆகியோருடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.

இதன் போது “ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியத்திற்கு அமைவாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன சுட்டிக்காட்டியிருந்தார். 

அதேபோல அவர், ஓய்வு பெற்ற பின்னர் போட்டியிடவில்லை. அதேவேளை மறைந்த ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவும் அவ்வாறே செய்தார்.

ருவான் விஜேவர்தன

இந்த மரபை ரணில் விக்கிரமசிங்கவும், பின்பற்றுவார்” என ருவான் விஜேவர்தன கூறியிருந்தார்.

ஒரு பரந்த கூட்டணியை உருவாக்குவதற்கும் அதற்கு , ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவைப் பெறுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விஜேவர்தன நேற்றைய சந்திப்பில் விளக்கமளித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி - சஜித் கூட்டணி தொடர்பில் தொடரும் கலந்துரையாடல் | Continued Discussion On Unp And Sajid Alliance

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த நடவடிக்கையை எதிர்த்தால் என்ன நடக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

“பொது மகா கூட்டணிக்கு ஆதரவாக சில ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் அவர்களுடன் பேசுவோம். ரணிலை ஆதரித்த ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் எங்களிடம் உள்ளது.

ஆனால் நாங்கள் செய்ய விரும்புவது ஐக்கிய மக்கள் சக்தி போன்றவர்களின் ஆதரவைப் பெறுவதுதான்.

புதிய கூட்டணி சின்னம் உள்ளிட்ட மற்ற முடிவுகள் பின்னர் முடிவு செய்யப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி

இதற்கிடையில், பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர்வதில்லை என்றும் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சிரேஷ்டர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி - சஜித் கூட்டணி தொடர்பில் தொடரும் கலந்துரையாடல் | Continued Discussion On Unp And Sajid Alliance

எங்கள் தலைவரை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் முடிவை ஏற்கனவே எடுத்துள்ளனர், என்று அவர் கூறினார்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து வெளியேறியிருந்தாலும், கட்சியின் ஆலோசகராக செயற்படுவார் என முன்னாள் எம்.பி.க்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனவும் ஊடகவியலாளர் மாநாட்டில் ரணில் எடுத்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும், தேவை ஏற்பட்டால் ரணில் தேசத்திற்காக எழுந்து நிற்பார் என அவர், கூறியிருந்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.