கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர (Jayantalal Ratnasekara) நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகிவரும் நிலையில் தற்போது புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆளுநர் நியமனம்
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் (
Nagalingam Vedanayakan) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் அவர் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் (25) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து பொதுத்தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.