நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 45,30902 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியமைக்கு தேசிய மக்கள் சக்தி மாத்திரமே காரணம் இல்லை என தமிழ் கவிதாசிரியர் ஜெயபாலன் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி ஊடகத்தின் நேர்காணலில் கலந்து கொண்டு, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர், “எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது தந்தையை போல அத்தனை கிளர்ச்சி ரீதியில் செயற்படவில்லை.
மேலும், சஜித் பிரேமதாச, 3 சதவீத வாக்கு நிலையில் இருந்த தேசிய மக்கள் சக்தி, அரகலய போராட்டத்திற்கு பிறகு வளர்ச்சி அடைந்திருந்ததை அறிந்திருக்கவில்லை.
அவ்வாறு தெரிந்திருந்தால், சஜித், ரணிலுடன் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டிருப்பதுடன், ஒருவர் ஜனாதிபதியாகவும் மற்றையவர் பிரதமராகவும் பதவி வகித்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளவற்றுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி,