சீனாவின்(china) புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்(nuclear-powered submarines) ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வுஹான் அருகே உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியுள்ளது, இது தொடர்பான தகவல்களை சீனா மூடிமறைத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் படைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சீனாவினால் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்
சீனாவினால் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலே இவ்வாறு மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீர்மூழ்கிக் கப்பலில் அணு எரிபொருள் ஏற்கனவே ஏற்றப்பட்டதா அல்லது கப்பல் மூழ்கியபோது எரிபொருள் நிரப்பப்படவில்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அமெரிக்க(us) மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறினார்.
எந்தத் தகவலும் இல்லை
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிய செய்தியை முதலில் வெளியிட்டது.
வோஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், “நீங்கள் குறிப்பிட்டுள்ள சூழ்நிலையை நாங்கள் அறிந்திருக்கவில்லை, தற்போது அது தொடர்பில் வழங்குவதற்கு எந்தத் தகவலும் இல்லை” என்று கூறினார்.