சுமந்திரனை இலங்கை தமிழரசுக்கட்சி கட்டுப்படுத்த முடியாமல் போனமை ஒரு வெட்கக்கேடான விடயம். சுமந்திரன் (sumanthiran)தான் சொல்லும் கருத்து எல்லாம் கட்சி ரீதியான முடிவு என்றே தெரிவிக்கிறார்.இந்த விடயத்தில் சிறீதரன்(sritharan) முன்னுக்கு வந்து அதிகாரத்தை கையில் எடுத்து செயற்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு தெரவித்தார் அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன்.
ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்விற்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் தமிழர்கள் தொடர்பில் அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) அல்லது ஜே.வி.பி எடுத்த முடிவுகள் முற்போக்கானவையாக இருக்கவில்லை.
இதில் ஆச்சரியம் தரும் விடயம் என்னவென்றால் ஒருவருமே நுழையமுடியாத ஐ.தே.கவின் கோட்டைக்குள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி கணிசமான வெற்றியை பெற்றுள்ளது.
ரணில்(ranil),சஜித் (sajith)கூட தமிழர்கள் தொடர்பாக நிறையவே தவறு செய்தவர்கள்தான்.அதேபோன்று அநுர குமார திஸாநாயக்கவும் தமிழர்கள் தொடர்பில் தவறுகளை விட்டவர் என்ற குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்..
https://www.youtube.com/embed/x3GS_9igy-k