ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு உறவுகள்
இதன்போது. இலங்கை நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்து மேம்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதுடன், பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Pleasure to meet with President Dissanayake @AnuraDisanayake today to discuss the enduring U.S.-Sri Lanka partnership. I emphasized our shared goals of building stronger, inclusive communities and thriving local economies, highlighting that our assistance and programs empower Sri… pic.twitter.com/aKdrjE6NJv
— Ambassador Julie Chung (@USAmbSL) October 1, 2024