தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்து நாடாளுமன்றத் தேர்தலை முகங்கொடுப்பதற்கான முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வடக்கு கிழக்கை மையப்படுத்தி இயங்குகின்ற தமிழ்த் தேசிய கட்சிகள், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் என்பன இணைந்து ஒரு அணியாகச் செயற்படுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
புரிந்துணர்வு
எனினும், ஏனைய கட்சிகள் இந்த யோசனை தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாத நிலையில், இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.
மேலும், பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் குறித்த கட்சிகள் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.