முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

எந்தவொரு நோக்கத்திற்காகவும் இஸ்ரேலுக்குச் (Israel) செல்ல எவரேனும் தயாராக இருந்தால் அந்த வெளிநாட்டு பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (Sri Lanka Bureau of Foreign Employment) தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா (Gamini Senarath Yapa) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் லெபனானின் (Lebanon) தற்போதைய போர் நிலைமை தொடர்பில் நேற்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேவையான நடவடிக்கை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “போர் நிலைமையை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

யாரேனும் இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியா (Syria) ஆகிய நாடுகளுக்கு செல்ல விரும்பினால் வெளியுறவு அமைச்சகத்தை முழுமையாக தொடர்பு கொள்ள வேண்டும்.

இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Warning Issued To Sri Lankans Going To Israel

இஸ்ரேலில் உள்ள இலங்கையர் ஒருவர் மீண்டும் இந்த நாட்டுக்கு வர விரும்பினால் அவர் தூதரகத்துக்குத் அறிவிக்க வேண்டும்.

தற்போது சுமார் 12,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணியாற்றி வருகின்றனர் இருநாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களின்படி இந்த ஆண்டு கட்டுமானத் துறை மற்றும் விவசாயத் துறைக்கு சுமார் 6,700 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.

போர் நிலைமை

சுமார் 5000 பேர் செவிலியர் பணிக்கு சென்றுள்ளனர் தற்போதைய போர் நிலைமையால் இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது தேவைப்பட்டால், தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.

அந்நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம் போல் இடம்பெறுகிறது ஆனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள்.

இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Warning Issued To Sri Lankans Going To Israel

லெபனானில் சுமார் 7,600 பேர் வேலை செய்கிறார்கள் தூதரகம் எல்லா நேரங்களிலும் இலங்கையர்களுக்கு ஆதரவாக நிற்கிறது சுமார் 28 பேர் பாதுகாப்பு கோரி வந்துள்ளனர் அவர்கள் இரு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

லெபனானில் உள்ள எந்தவொரு இலங்கையர்களும் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் அந்தத் தகவல் அதிகாரப்பூர்வ முகநநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையர் ஒருவருக்கும் விபத்து ஏற்படவில்லை இலங்கைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தூதரகங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.