முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பானது இன்று (03) பிற்பகல் ப்ளவர் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த சகல தரப்பினரும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமையல் எரிவாயு  சின்னத்தில் போட்டியிடுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அனுமதி வழங்கியுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுதல் 

அந்த ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக நேற்று (02) இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Who Supported Ranil In The Presidential Election

இதற்கமைய, விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியின் ஊடாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமையல் எரிவாயு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான கலந்துரையாடல் 

எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கான சபை ஸ்தாபிப்பது என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Who Supported Ranil In The Presidential Election

அத்துடன், ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இடம்பெறும் கலந்துரையாடல்களை உத்தியோகபூர்வமாகக் கைவிடுவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்