யேமனின் (Yemen) பல பகுதிகளில் ஹவுதி (Houthi) இலக்குகள் மீது அமெரிக்க (America) வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யேமன் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் (Iran) ஆதரவு கிளர்ச்சிக் குழு கூறியதை அடுத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யேமனின் பல பகுதிகளில் ஹவுதி இலக்குகள் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
கடந்த ஆண்டு முதல் காசாவில் தொடரும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரில் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலைக் கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதுவரை கிட்டத்தட்ட 100 கப்பல்களை அவர்கள் தாக்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தரப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கப் போர்க்கப்பல்
இதற்கமைய, ஈரான் ஆதரவு குழு இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நிறுவனங்களுடன் தொடர்பு கொண்ட வணிகக் கப்பல்களில் ஏவுகணைகளை வீசி, ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை அனுப்பி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
அத்தோடு, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகுகளையும் ஏவி தாக்குதலை முன்னெடுக்கின்றனர் முன்னதாக இஸ்ரேலுக்கு ஆதரவாக செங்கடலில் பயணித்ததாகக் கூறப்படும் மூன்று அமெரிக்கப் போர்க்கப்பல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹவுதி குழு பொறுப்பேற்றது.
இதற்கமைய ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவும் அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானத்தை தாக்கியதாக கூறியதை தொடர்ந்து அமெரிக்கா பதிலடி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.