சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஜோன் தெஸ்லெஃப்(Jan Thesleff) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன்(Harini Amarasuriya) நேற்று(04.10.2024) இடம்பெற்ற சந்திப்பின் போதே சுவீடன் தூதுவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்வீடன் அரசின் வாழ்த்து
இதேவேளை, இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டமைக்கு ஸ்வீடன் அரசாங்கத்தின் வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி மற்றும் இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பில் சுவீடன் அரசாங்கத்தின்
சுவீடன் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுவர் போஷாக்கு விவகாரம் தொடர்பில் சுவீடன் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வந்த பிரதமர், இலங்கை பிராந்தியத்தில் உயர் சுகாதார குறிகாட்டிகளை பேணி வருகின்ற போதிலும், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போசாக்கு சவால்கள் இன்னும் காணப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.