ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர்
அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனங்கள் நேற்று(04.10.2024) உத்தியோகபூர்வமாக கொழும்பு, 07 இல் உள்ள
அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தூக்கி
எரிந்து விட்டு ரணிலுடன் கைகோர்த்துள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சியின்
அங்கத்துவத்தினையும் இதன்போது ரணிலிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.
பொதுத் தேர்தல்
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹ்ரூப்,
“சிறந்ததொரு தலைவனுக்கான உதாரணமாக ரணில் விக்ரமசிங்க விளங்குகிறார்.
முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்தவர், இவரே ரிசாட் பதியுதீன் சிறையில் அடைக்கப்பட்ட போதும் கூட நாடாளுமன்றில் குரல்
கொடுத்தவர்.
எனவே ரிசாட் பதியுதீன் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஹக்கீம் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருக்கும் போது தனித்து போட்டியிட வேண்டும் என தெரிவித்தும்
றிசாட் மறுத்தார். இதனால் நான் வெளியேறி ரணிலுடன் இணைந்தேன்.
சஜீத் பிரேமதாசாவால் ஆட்சிக்கு வர முடியாது, ஏன் என்றால் 2019ஆம் ஆண்டில் தேர்தலின் போது ஐக்கிய தேசிய
கட்சியின் ரணிலின் வாக்கும் அங்கு இருந்தது.
மூன்று தேர்தல்களில் இரு ஜனாதிபதித் தேர்தலிலும் ஒரு பொதுத் தேர்தலிலும் தோல்வி கண்ட சஜித் உடன்
இணைந்து றிசாட் மற்றும் ஹக்கீம் சிறுபான்மையினரை பாதுகாக்காது ஏமாற்றுகிறார்கள்.
இந்த முறை 113 பெரும்பான்மை ஆசனங்களை இந்த அரசாங்கத்தால் பெற முடியாது.
எனவே அநுர குமாரவுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் ஊடாக ஆட்சி
அமைந்தால் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.