நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் சிறிரெலோ கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“தென்னிலங்கை மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அரசியலில்
புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். அத்தகையதொரு அரசியல் புரட்சியை தமிழ்
மக்களும் விரும்புகிறார்கள்.
தமிழ் மக்கள்
கடந்த காலங்களில் தாம் தெரிவு செய்த உறுப்பினர்களால் ஏமாந்த நிலையில், அவர்களை
புறக்கணித்து புதிய துடிப்புள்ளவர்களை இம்முறை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு
தமிழ் மக்களும் தயாராகி வருகின்றார்கள்.
அம்மக்களின் விருப்பதற்திற்கு ஏற்ப
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல்
தொகுதியில் துடிப்புள்ள இளம் மற்றும் திறமைவாய்ந்த வேட்பாளர்களுடன் சிறிரெலோ
கட்சி ஜனநாயக தேசிய கூட்டனி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில்
போட்டியிடுகின்றது.
அதற்கு உங்களது ஆதரவையும் வாக்கினையும் வழங்கி வன்னியை மாற்ற ஒன்றிணையுமாறு
கேட்டுக்கொள்கின்றேன்” என வலியுறுத்தியுள்ளார்.