முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் கட்சிகளின் செயல் : தமிழ் மக்கள் பொதுச்சபை கடும் அதிருப்தி

தமிழ் கட்சிகளின் செயல் “தேசமாய் ஈழத்தமிழர்களை
ஒன்றுதிரட்டுதல்’ என்ற உன்னத குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது என தமிழ் மக்கள் பொதுச்சபை தெரிவித்துள்ளது.

இன்று(06) தமிழ் மக்கள் பொதுச்சபை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள் பொதுச்சபை ஈழத்தமிழ் மக்களின் விடிவை நோக்கிய பயணத்திற்கும் மக்களை
ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கும் தொலைநோக்குடன் உருவாகியது.

சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தல்

அது தன்னைப் போதியளவில்
ஒழுங்கமைத்து வலுவூட்டி விரிவாக்குவதற்கு முன்னரேயே மிகக்குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை ஈழத்தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பரீட்சார்த்த களமாக கையாளுவதற்கு முன்வந்தது.

இம்முயற்சியில் வெற்றிபெற்றது மாத்திரமல்லாது ஒரு புதிய அரசியல் அணுகுமுறைக்கூடாக ஒடுக்கப்படும் மக்கள் எவ்வாறு தங்கள் ஒற்றுமையினையும் திரட்சியினையும் தேசமாய் முன்நிறுத்தலாம் என்ற மாதிரியையும் உலகின் முன் துணிவுடன் காட்டியுள்ளது.

தமிழ் கட்சிகளின் செயல் : தமிழ் மக்கள் பொதுச்சபை கடும் அதிருப்தி | Tamil People General Assembly Dissatisfied

சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பொதுச்சபை ஒரு தேர்தலாகவோ, பதவிக்கான போட்டியிடலாகவோ கொண்டிருக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் 

ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து சில நாட்களுக்குள் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் பதவிகளுக்கான போட்டி அரசியலாகவும், மக்களை அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்ந்து கூறுபடுத்தி சிதறடிக்கும் செயற்பாடுகளை முதன்மையாக கொண்டுள்ளது என நாங்கள் அறிவோம்.

தமிழ் கட்சிகளின் செயல் : தமிழ் மக்கள் பொதுச்சபை கடும் அதிருப்தி | Tamil People General Assembly Dissatisfied

இத்தகைய நிலையில் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளை அவர்களது இருப்புக்கான, பதவிக்கான நலன்களுக்கு அப்பால் அழைத்துச் சென்று தேசத்திற்காய் ஒருங்கிணைக்க கால அவகாசமோ,சாத்தியமோ தமிழ் மக்கள் பொதுச்சபைக்கு தற்போதைய நிலையில் இல்லை.

தேசமாய் ஈழத்தமிழர்களை ஒன்றுதிரட்டுதல்

அதேவேளையில் பதவி நோக்கங்களுக்காக எதிரணியாக பிரிந்து நின்று மக்களின் ஒற்றுமையின் சிதறடிக்கும் போட்டி
அரசியல் தமிழ் மக்கள் பொதுச்சபை வரித்துக் கொண்ட ‘தேசமாய் ஈழத்தமிழர்களை
ஒன்றுதிரட்டுதல்’ என்ற உன்னத குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது என்பதனையும் மீண்டும் நினைவூட்டுகின்றோம்.

தமிழ் கட்சிகளின் செயல் : தமிழ் மக்கள் பொதுச்சபை கடும் அதிருப்தி | Tamil People General Assembly Dissatisfied

இதனடிப்படையில் 2024 நவம்பர் 14ம் திகதி இடம்பெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத்
தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபை எந்தவொரு வகிபாகத்தினையும் எடுப்பதில்லை என்று  2024 ஒக்ரோபர் 05ஆம் திகதி பொதுச்சபைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

தமிழ் மக்கள் பொதுச்சபை

தமிழ் மக்கள் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் இந்த தேர்தல்
தொடர்பாக பொருத்தமான தீர்மானங்களை தங்கள் அமைப்பு சார்ந்து மேற்கொள்ளுமாறு
ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

தமிழ் கட்சிகளின் செயல் : தமிழ் மக்கள் பொதுச்சபை கடும் அதிருப்தி | Tamil People General Assembly Dissatisfied

இந்த தேர்தலின் பின்பு தமிழ் மக்கள் பொதுச்சபை வலுவூட்டப்பட்டதாகவும்,
விரிவுபடுத்தப்பட்டதாகவும் ஈழத் தமிழர் தேசத்தைக் கட்டமைப்பதற்காக மக்களை ஒன்று திரட்டும் தனது குறிக்கோள் நோக்கிய பணியில் தளராது பயணிக்கும் என்பதனையும் இவ்விடத்தில்
உறுதியாக தெரிவிக்கின்றது என தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.