அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஜனாதிபதியாகி ஒரு வாரத்தில் யாழ்ப்பாண மக்களும் அவரை ஆதரிக்க ஆரம்பித்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட உறுப்பினர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சிக்கு சிறப்பு நேர்க்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ”மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்றனர்.
பதவிக்கு வந்து 2 வாரங்களில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும் எல்லா மாற்றங்களையும் 2 வாரங்களில் செய்துவிட முடியாது.
சாதாரண மக்கள் பிரிவினையை விரும்பவில்லை.” என்றார்.
மக்களை தூண்டிவிட்டு அதில் குளிர் காயும் வரலாறு உள்ளது.
மேலும், உடனடியாக அநுர குமார திசாநாயக்கவினால் செய்யக்கூடிய மாற்றங்கள் என்ன?
தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டது போல ஊழல் வாதிகள் கைது செய்யப்படுவார்களா?
முன்னாள் அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுத்து வருகின்றனர், அதற்கு அநுர குமார பதிலடி கொடுப்பாரா? என்பவற்றை அலசி ஆராய்கின்றது இன்றைய களம் நிகழ்ச்சி
https://www.youtube.com/embed/zaPcdC03ZVI