இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்காக உலக வங்கியுடன் 200 மில்லியன் டொலர் பெறுமதியான மேலதிக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தமானது இன்று (07) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில், நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன (K.M Mahinda Siriwardena) மற்றும் உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
மேலதிக ஒப்பந்தம்
அத்தோடு, இலங்கை (Sri Lanka) நாடாளுமன்றத்திற்கும் மற்றும் பாகிஸ்தான் (Pakistan) நாடாளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
மேற்படி ஒப்பந்தமானது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும் மற்றும் சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.