முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்கா மீது வட கொரியா அணு ஆயுத மிரட்டல்

அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்(Kim Jong Un) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘கிம் ஜாங் உன்’ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுத எச்சரிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில், “நமக்கு எதிராக அவர்கள் ஆயுதப்படையை உபயோகித்தால் எந்த தயக்கமும் இல்லாமல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது.

தாக்குதல் என்று நான் சொன்னதில் அணு ஆயுதங்களும் அடங்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீது வட கொரியா அணு ஆயுத மிரட்டல் | North Korea Nuclear Threat To Us

கொரிய தீபகற்பத்தில் ஒரே நாடக இருந்த கொரிய சாம்ராஜ்யம் 1910 முதல் 1945 வரை ஜப்பானின் காலனியாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜப்பான் சரணடைந்த பின்னர் அதே வருடத்தில் சுதந்திரம் பெற்ற கொரியா இரண்டாகப் பிரிந்தது. 

வட கொரியா 

வரலாற்றின் போக்கில் இரண்டு நாடுகளுக்குமிடையேயான பகைமை வளர்ந்து வந்தது. 

உலகின் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்து வாழும் வட கொரியா சமீப காலங்களாக ரஷியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. 

தென் கொரியவுக்கு குப்பை பலூன்களை அனுப்புவது. எல்லையில் ராணுவ சோதனைகளைச் செய்வது என உலக நாடுகளையும் பயத்திலேயே வட கொரியா வைத்துள்ளது.

அமெரிக்கா மீது வட கொரியா அணு ஆயுத மிரட்டல் | North Korea Nuclear Threat To Us

கடந்த 2006 ஆம் ஆண்டு, முதல் அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா அதுமுதல் உலகின் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளுள் முக்கியமானதாக மாறியது. 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்

இந்தியா உள்ளிட்ட மற்றைய அணு ஆயுத நாடுகள் மேற்கு நாடுகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் நிலையில் வட கொரியா சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதால் எப்போது என்ன செய்யும் என்று யூகிக்க முடியாமல் மேற்கு நாடுகள் குழம்பிப்போயுள்ளது. 

அமெரிக்கா மீது வட கொரியா அணு ஆயுத மிரட்டல் | North Korea Nuclear Threat To Us

கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் 40 வயதில் அதிகாரத்துக்கு வந்த கிம் ஜாங் உன் மேற்குலகுக்குக் கடந்த காலங்களிலும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாலும், தற்போதைய எச்சரிக்கை எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி இடம்பறெவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒட்டி வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.