Courtesy: Sivaa Mayuri
2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 246 சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சுயேட்சை குழுக்கள், செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 08க்கு இடையில் தங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன
வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள்
இதன்படி மட்டக்களப்பு (22), யாழ்ப்பாணம் (22), திகாமடுல்ல (37), திருகோணமலை (17) மற்றும் கொழும்பு (17) ஆகிய மாவட்டங்களில் அதிகளவு குழுக்கள் வைப்புகளை செய்துள்ளன.
இதுவரை , மொத்தம் 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் தேர்தல் ஆணையத்திடம் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதியன்று வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் நிறைவுக்கு வருகின்றன.
அத்துடன் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.