ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர் யாழ்ப்பாணம் (jaffna) தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (9.0.2024) பிற்பகல் 11 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை (Dharmalingam Siddarthan) முதன்மை வேட்பாளராக குறிப்பிட்டு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
மாமனிதர் ரவிராஜின் பாரியார்
தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி
சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு
சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ளார்.
இதேவெளை, இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான மாமனிதர் ரவிராஜின் பாரியார் சசிகலா எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடவுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் நூலிழையில் வெற்றிவாய்ப்பை தவறவிட்டிருந்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட அவர் விண்ணப்பித்திருந்த போதிலும் அவருக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை.
மேலும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சங்குச் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.