வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை பொதுஜன பெரமுன
இன்றையதினம் தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல்
மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன
மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
முதன்மை வேட்பாளர்கள்
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில்
இன்று மதியம் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.
இதன்போது வன்னியின் முதன்மை வேட்பாளர் துசாரி முத்துமாலி மற்றும் ஏனைய
வேட்பாளர்கள், கலந்துகொண்டிருந்தனர்.