எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில்
போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மக்கள் போராட்ட முன்னணியினர் கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் மக்கள் போராட்ட
முன்னணியினர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல்
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் செயலாளர் சி.கா.செந்திவேல் உள்ளிட்ட
குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை, மக்கள் போராட்ட முன்னணியினர் குடைச்சின்னத்தில் களமிறங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.