பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் வைத்தியர் ஸ்ரீநாத்தினை தேடிச் சென்று பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மதியம் 2.30 மணியளவில் இவ்வாறு பொலிஸார் தேடிச் சென்று விசாரணை நடத்தியுள்ளதாக குறித்த வைத்தியர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அலுவலகம் ஒன்றை அமைத்திருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தி இந்த விசாரணையை அவர்கள் மேற்கொண்டிருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸார் விசாரணை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றையதினம் அலவலகம் ஒன்றிற்கான வாஸ்து சாந்தி நிகழ்வு ஒன்றினை நடத்தியிருந்தோம். அதில் எமது நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும், இந்த நிகழ்வு சம்பந்தமாக தவறான முறைப்பாடு வழங்கப்பட்டு இன்றையதினம் பொலிஸார் எம்மை தேடி வந்து விசாரணை நடத்தினர்.
நாங்கள் தேர்தல் அலுவலகம் ஒன்றை அமைத்திருப்பதாக தெரிவித்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. எனினும், நாங்கள் அந்த கட்டிடத்தில் எந்தவிதமான தேர்தல் அலுவலகத்தையும் அமைக்கவில்லை.
தேர்தல் தொடர்பான பதாதைகளோ, பிரசுரங்களோ கூட அங்கு இருந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த வைத்தியர் அந்தப் பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் எனவும், இதன் காரணமாக ஏதேனும் அரசியல் பிரமுகர்கள் இவ்வாறு முறைப்பாடு அளித்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.