Courtesy: H A Roshan
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சண்முகம் குகதாசன் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (11.10.2024) அவரால் வேட்பு மனு கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில், இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளில் இருந்து மூவரும் திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
விமர்சனங்கள்
இதில் சண்முகம் குகதாசன், கந்தசாமி ஜீவரூபன், கதிர்காமத் தம்பி சுந்தரலிங்கம், காலி ராஜா கோகுல் ராஜ் ஆகிய நால்வரே தமிழ் அரசு கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ளனர்.
பலதரப்பட்ட விமர்சனங்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொண்டு, கலந்துரையாடல் ஒன்றின் பின்பே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முதன்மை வேட்பாளர் இம்ரான் மஹ்ரூப் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினர் இன்றையதினம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.