சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) வருகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாசம் பிடித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் (Karuna Amman) என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் (Vinayakamurthy Muralitharan) கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த விடயத்தை மட்டக்களப்பில் (Batticaloa) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் தற்போதுள்ள ஜனாதிபதியிற்கு ஊழலற்ற அரசாங்கம் வேண்டும் என்பதற்காக ஆதரவளித்திருந்தோம் ஆனால் பொதுத் தேர்தலானது தமிழ் இனத்திற்குரியது.
ஜனாதிபதி தேர்தல்
இதனால் ஜே.வி.பியிற்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவளிக்க போவதில்லை காரணம் தமிழ் இனத்திற்கு பாரிய துரோகம் இழைத்த கட்சி ஜே.வி.பி ஆகும்.
வடக்கு மற்றும் கிழக்கை நீதிமன்றத்திற்கு சென்று அதிகாரப்பூர்வமாக பிரித்தவர்கள் ஜே.வி.பியினர் இருப்பினும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்குவாராக இருந்தால் அதனை நாங்கள் ஆதரிக்கின்றோம்.
அத்தோடு, அண்மையில் சாணக்கியன் ரணிலிடம் (Ranil Wickremesinghe) 60 கோடி வாங்கிவிட்டு சஜித்துடன் திரிந்தார், இதெல்லாம் மிகவும் கேவலமான விடயம்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/R0K-wr3E1po