நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில்
போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (Ceylon Workers’ Congress) தாக்கல் செய்துள்ளது.
கட்சியின் சார்பாக அதன்
பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் (M. Rameshwaran) உள்ளிட்ட குழுவினர் இன்று (11.10.2024) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் (UNP)கூட்டணியின் கீழ் யானை
சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
வேட்புமனு தாக்கல்
இதன் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளாரான ஜீவன் தொண்டமான் மற்றும்
வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்புமனுவை
தாக்கல் செய்தனர்.
இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஈரோஸ் ஜனநாயக முன்னணி (Eros Democratic Front) நேற்று (10) வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுப்பிரமணியம் காண்டீபன் ஆகியோர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.