எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றையதினம் (11) யாழ் மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளார்.
அதிகூடிய விருப்புவாக்கு
அங்கஜன் இராமநாதன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றிருந்தார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் இன்று (11) பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



