முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்ற தேர்தல் : நுவரெலியாவில் எட்டுபேரை தெரிவு செய்ய 300 ற்கும் மேற்பட்டோர் களத்தில்

நுவரெலியா(nuwara eliya) மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 17 அரசியல் கட்சிகளிலும்11 சுயேச்சை குழுக்களிலும் சேர்ந்து 308 பேர் போட்டியிடுகின்றனர்.

2024 பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 17 அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்களுக்கான வேட்புமனுக்கள்
கிடைக்கப்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட செயலாளர்
நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் 

நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று(11) நண்பகல் 12 மணிக்கு நுவரெலியா மாவட்டத்திற்கு,
15 சுயேச்சைக் குழுக்களும், 20 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும்
வேட்புமனு தாக்கல் செய்தன.

04 சுயேச்சைக் குழுக்கள் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி, தேசிய மக்கள் கட்சி
மற்றும் அருணலு மக்கள் முன்னணி ஆகியன சமர்ப்பித்த வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் : நுவரெலியாவில் எட்டுபேரை தெரிவு செய்ய 300 ற்கும் மேற்பட்டோர் களத்தில் | Parliamentary Election Nuwara Eliya District

நாடாளுமன்ற தேர்தலை கடந்த ஜனாதிபதி தேர்தலை போல அமைதியான முறையில் நடாத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்களின் முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான நந்தன கலபொட குறிப்பிட்டார்.

605292 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி

நுவரெலியா மாவட்டத்தில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நுவரெலியா மஸ்கெலியா (இரட்டை தொகுதி)வலப்பனை கொத்மலை ஹங்குரன்கெத்த ஆகிய நான்கு தொகுதிகளில் இருந்து 605292 வாக்காளர்கள் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் : நுவரெலியாவில் எட்டுபேரை தெரிவு செய்ய 300 ற்கும் மேற்பட்டோர் களத்தில் | Parliamentary Election Nuwara Eliya District

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக
நுவரெலியா மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்வருமாறு,

மக்கள் போராட்டக் கூட்டணி,

ஜன சேதா முன்னணி,

சோசலிச சமத்துவக் கட்சி,

இரண்டாம் தலைமுறை,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,

ஐக்கிய மக்கள் சக்தி,

தேசிய ஜனநாயக முன்னணி,

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி,

சர்வசன அதிகாரம்,

தேசிய மக்கள் சக்தி,

ஐக்கிய ஜனநாயகக் குரல்,

ஜனநாயக தேசியக் கூட்டணி,

ஜனநாயக இடதுசாரி முன்னணி,

ஐக்கிய தேசிய கட்சி,

சமபீம கட்சி,

திராவிட ஐக்கிய விடுதலை முன்னணி,

ஐக்கிய சோசலிசக் கட்சி போட்டியிடவுள்ளதுடன், 11 சுயேச்சைக் குழுக்களும்
தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.