முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசுக் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும்! சிறீதரன்

தற்போதைய கள நிலவரத்தில் தமிழரசுக் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்(Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று(12) விஜயதசமி விழாவும் மாவட்டத்தின் இலங்கை தமிழரசு கட்சியினுடைய வட்டார உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சங்கு சின்னம்

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “நாங்கள் ஒரு பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எங்களது முழு செயற்பாடுகளையும் முன்னிறுத்தி இருந்தோம்.

குறிப்பாக தமிழ் மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழ் மக்களுக்கு வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்த பொது வேட்பாளரை ஆதரித்தமை என்பது உண்மையாகும்.

தமிழரசுக் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும்! சிறீதரன் | Sritharan Itak General Election 2024

அதற்காக பாவிக்கப்பட்ட சங்கு சின்னத்தை வேறு சிலர் கையில் எடுத்திருப்பது என்பது முரண்பாடான ஒரு விடயமாகும்.

அதனை அவர்கள் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும் .

தமிழர்களின் பிரச்சினை

குறிப்பாக தமிழரது ஒற்றுமை தேசத் திரட்சி தமிழர்களை ஒன்றுபடுத்துதல் என்ற காரியத்துக்காக ஆற்றப்பட்ட அந்த விடயத்தில் தமது சின்னமாக அதனை கையில் எடுத்திருப்பது ஒரு முரணான விடயம்.

ஜனாதிபதித் தேர்தல்கள் பல நடைபெறுகின்றன, பல்வேறு சின்னங்களுக்காக மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்ற  அடிப்படையிலே நாங்களும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு ஆதரவுகளை வழங்கி இருக்கின்றோம்.

தமிழரசுக் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும்! சிறீதரன் | Sritharan Itak General Election 2024

அத்துடன், வேட்பாளர்கள் நியமனங்களில் திருப்தி உண்டா? இல்லையா ?என்பதற்கு அப்பால் தற்போதைய கால சூழலில் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க  வேண்டும். அதுவே எனது நிலைப்பாடு” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் என கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.