முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எதிர்பாராத நேரம் அடித்த இஸ்ரேல் : நிலைகுலைந்த ஈரான்

இஸ்ரேல் (Israel) – ஈரான் (Iran) இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய சைபர் தாக்குதலை (Cyberattack) மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சைபர் தாக்குதல் நேற்றையதினம் (12.10.2024) நடாத்தப்பட்டதுடன், ஈரானின் அணுசக்தி நிலையம் முதல் பல முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் (Hamas) நடத்திய தாக்குதலால் இந்த மோதல் தொடங்கியது. அதன் பிறகு ஹமாஸ் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

சைபர் தாக்குதல்

ஹமாஸிற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா (Hezbollah) இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டது. இதையடுத்து ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

எதிர்பாராத நேரம் அடித்த இஸ்ரேல் : நிலைகுலைந்த ஈரான் | Irans Cyber Attack Israel

குறிப்பாகக் கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா என்பது ஈரான் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பாகும்.

இதனால் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ஈரானை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் ஈரான் இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

ஏவுகணை தாக்குதல்

இதில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் இதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று இஸ்ரேல் கூறியிருந்த நிலையில், இப்போது ஈரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடாத்தியுள்ளது.

எதிர்பாராத நேரம் அடித்த இஸ்ரேல் : நிலைகுலைந்த ஈரான் | Irans Cyber Attack Israel

ஈரானை மொத்தமாக முடக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே இஸ்ரேல் இந்த சைபர் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈரானின் சைபர்ஸ்பேஸின் முன்னாள் செயலாளர் ஃபிரூசாபாடி கருத்து தெரிவிக்கையில் “ஈரான் அரசின் மூன்று முக்கிய அமைப்புகளான நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என்று மூன்றுமே மிக மோசமான சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

அணுசக்தி மையங்கள்

மேலும் பல முக்கிய தகவல்களும் திருடப்பட்டுள்ளன. குறிப்பாக எங்கள் அணுசக்தி மையங்களைக் குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. எரிபொருள் விநியோக உட்கட்டமைப்பு, நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து, துறைமுகங்கள் எனப் பலவற்றைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளது.

எதிர்பாராத நேரம் அடித்த இஸ்ரேல் : நிலைகுலைந்த ஈரான் | Irans Cyber Attack Israel

சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட சில துறைகள் பற்றி மட்டுமே நான் சொல்கிறேன். இன்னும் பல அமைப்புகள் மீதும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி போர் வெடித்தால் இது சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படும் நிலையில், நிலைமை தொடர்ந்து மோசமடைவது உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.