ரஜினியின் வேட்டையன் படம் கடந்த அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் விடுமுறை நாட்களில் படத்திற்கு நல்ல வசூல் வந்துகொண்டிருந்தது.
இதுவரை உலகம் முழுக்க 240 கோடி ரூபாய்க்கும் மேல் வேட்டையன் வசூலித்து இருக்கிறது என லைகா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
5 நாள் சென்னை வசூல்
வேட்டையன் படம் 5 நாட்களில் சென்னையில் மட்டுமே 9.2 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால், வேட்டையன் வசூல் இனி அதிகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.