பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்டணங்களை குறைக்கும் தீர்மானம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் மற்றும் பேருந்து கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் மற்றும் பேருந்துகளின் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை.
இதன்காரணமாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்பித்து இது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.