முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச ஊழியர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மக்கள் ஆணையின் கட்டமைப்பு, நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரச உத்தியோகத்தர்கள் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வலியுறுத்தியுள்ளார்.

அரச ஊழியர்கள் தங்களின் பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தங்களை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வலுசக்தி அமைச்சில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

வலுசக்தி அமைச்சு

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் வலுசக்தித் துறைக்கு முன்னணி இடம் வழங்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சு என்பது நிதி வருமானங்களைப் பெறும் அமைச்சு எனவும், அதிக வருமானம் கிடைக்கும் போது முறைகேடுகள் இடம்பெறலாம் என்ற கருத்து சமூகத்தில் நிலவும்.

அரச ஊழியர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Notification By Anura About Government Employees

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது விருப்பத்தை எதிர்பார்ப்புடன் பயன்படுத்தியுள்ளனர், அந்த ஆணைக்கு நான் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

பழைய அரசியல் கலாசாரத்தின் மீதான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அரச சேவையின் செயற்பாடுகள் தொடர்பான பிரஜையின் அதிருப்தி காரணமாக புதிய அரசியல் சம்பிரதாயத்தினை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

பொருளாதார வீழ்ச்சி

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம் என்பனவே காரணமாக அமைந்ததென மக்கள் நம்புகின்றனர், அதனை தடுப்பதற்காகவே இம்முறை மக்கள்ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Notification By Anura About Government Employees

அரச பொறிமுறை முழுவதும் பரவியுள்ள மோசடி மற்றும் ஊழலைத் தடுப்பதற்காக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நான் பாதுகாப்பேன், அரச ஊழியர்களும் தங்களின் பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

பொதுச் சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும், அந்தச் சொத்துக்களை மோசடி அல்லது ஊழலுக்கு உட்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.

பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன்மிக்க மற்றும் செயற்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியமானது, அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

அரசியல் தலைமைத்துவம்

இந்த முறை மக்கள் ஆணையின் கட்டமைப்பு, நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரச உத்தியோகத்தர் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும், அதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை வழங்க எமது தரப்பு தயாராக இருக்கின்றது.

அரச ஊழியர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Notification By Anura About Government Employees

அரச உத்தியோகத்தர் தனது கடமை எல்லைக்குள் மேற்கொள்ளும் மக்கள்நல அனைத்து செயற்பாடுகளுக்கும் நாம் முன் நிற்கின்றோம், செய்யக்கூடாத ஒன்றைச் செய்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப் போவதில்லை.“ என ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால,மின்சார சபைத் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிடிய, மின்சார சபை பொது முகாமையாளர் பொறிறியலாளர் கே.ஜீ.ஆர்.எப்.கொமெஸ்டர், பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக்க ராஜகருணா உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.