நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வழமையான சலுகைகளை மறுப்பதாக மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) வேட்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம (Rehan Jayawickreme) தெரிவித்துள்ளார்.
மாத்தறை (Matara) மாவட்டத்தில் மொரவக்க மற்றும் தெனியாயவில் நடைபெற்ற கூட்டங்களின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் போது, தேர்தலில் தெரிவு செய்யப்படுவோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஜயவிக்ரம தனது குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவை
அத்தோடு, அரசியலில் புதிய முகங்களின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
I addressed my team members in Morawaka and Pitabeddara yesterday, emphasizing the importance of having new faces in the next parliament. I also pledged not to accept a pension or vehicle permit if I am elected and offered these benefits.@sjbsrilanka#lka #GE2024SL pic.twitter.com/OUZQxFWamn
— Rehan Jayawickreme (@RehanJayawick) October 15, 2024
மேலும், தனிப்பட்ட நன்மைகளைப் பெறாமல் மக்களுக்குச் சேவை செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தனது எக்ஸ் கணக்கில் மேலும் தெரிவித்துள்ளார்.