முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் ஆபத்தான நிலையில் உள்ள இரு பாலங்கள்

முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள வட்டுவாகல் பாலம் மற்றும்
புளியம்பக்கனை பாலம் ஆகிய இரு பாலங்களும் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாது ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள்
ஏற்படுவதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருகின்றன.

முல்லைத்தீவு பரந்தன் ஏ
35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் கடந்த 2009 ஆம்
ஆண்டுக்கு முன்னரான யுத்தம், 2004 ஆம் ஆண்டுக்கான ஆழிப்பேரலை அனர்த்தம் என்பவற்றால் கடுமையாக  சேதத்துக்கு உள்ளாகியது

இந்த பாலத்தின் அவசியம்

தற்போது குறித்த
பாலத்தில் சிறுசிறு திருத்த வேலைகள் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு
பயன்படுத்தப்பட்டது

முல்லைத்தீவில் ஆபத்தான நிலையில் உள்ள இரு பாலங்கள் | Two Bridges In Critical Condition In Mullaithivu

இந்த பாலத்தின் தொடர் பணிகளின் அவசியம் தொடர்பில் கடந்த
2013ஆம் ஆண்டு முதல் முல்லைதீவு மாவட்டத்தில் நடைபெறுகின்ற மாவட்ட
ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மற்றும் மாகாண சபை ஆகியவற்றில் நடந்த
கலந்துரையாடல்களிலும் பாலத்தின் அவசியம் பற்றி கோரிக்கை
விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் அதற்கான அமைச்சரவை
தீர்மானங்களும் கொண்டு வரப்பட்ட நிலையில்,  அதற்கான எந்தவிதமான
நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஏ9 வீதிக்கு அடுத்தபடியான போக்குவரத்து பாதை

இவ்வாறான நிலையில் குறித்த பாலத்தின் பல
இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன

முல்லைத்தீவில் ஆபத்தான நிலையில் உள்ள இரு பாலங்கள் | Two Bridges In Critical Condition In Mullaithivu

இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளமையும் இங்கு
குறிப்பிடத்தக்கது

குறிப்பாக இங்கு 15
க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு உயிரிழப்புக்களும்
நிகழ்ந்துள்ளன.

எனவே, ஏ9 வீதிக்கு அடுத்தபடியான போக்குவரத்து பாதையாகவும் வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் போக்குவரத்து பாதையாகவும் உள்ள குறித்த வீதியிலுள்ள இருபாலங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

you may like this 

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.