அண்மையில் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களை, இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள தெற்கு லெபனான் பிரதேசங்களுக்கு அழைத்துச்சென்றிருந்தது இஸ்ரேலிய இராணுவம்.
அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களுள் ஒருவர், இஸ்ரேலியப் படைநடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்த பிரிகேட் கொமாண்டரிடம் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.
‘லெபனான் தொடர்பாக உங்களுக்கு நிறைய அனுபவங்கள் இருந்திருக்கின்றன. 2006 யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றீர்கள்.
லெபனான் தொடர்பான பல புலனாய்வுத் தகவல்களைத் திரட்டித்தான் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பீர்கள்.
அப்படி இருந்தும் தெற்கு லெபனானில் நீங்கள் நுழைந்தபோது உங்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் என்று ஏதாவது இருக்கின்றதா?’ என்று அந்த நிருபர் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்கு அந்த பிரிகேட் கொமாண்டர் வழங்கிய ஆச்சரியமான பதிலை அடிப்படையாக வைத்து தெற்கு லெபனானின் நிலவரம் பற்றிய ஆய்வினைச் செய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/Zh7VHyMHChY