முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். மாவட்ட வேட்பாளர் மற்றும் காவல்துறை இடையில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் (jaffna) தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களுக்கும் யாழ். காவல்துறையினருக்கும் இடையில் கலந்துரையாடல்
நடைபெற்றுள்ளது.

இக் கலந்துரையாடல் யாழ். காவல் நிலைய மாநாட்டு மண்டபத்தில் நேற்று (17.10.2024) புதன்கிழமை முற்பகல் 10
மணியளவில் யாழ். பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சூரிய பண்டார
தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வன்முறைகளைத்
தடுக்கும் முகமாக குழு ஒன்று அமைக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பிரசார இடங்களுக்கு அனுமதி

அந்தவகையில், யாழ். பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் கட்சிகள் மற்றும்
சுயேச்சைக் குழுக்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய 51 பேர் கொண்ட குழு
அமைக்கப்படவுள்ளது.

யாழ். மாவட்ட வேட்பாளர் மற்றும் காவல்துறை இடையில் கலந்துரையாடல் | Jaffna District Candidates And Police Meeting

இந்தக் குழுவில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சார்பில் 7
உறுப்பினர்களும், தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும்
சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 44 உறுப்பினர்களும் என மொத்தமாக 51
உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.

மேலும், தேர்தல் பிரசார இடங்களுக்கு அனுமதி கோரல், ஒலிபெருக்கி சாதனங்களைப் பயன்படுத்தும் கால அளவு தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் சிறீமோகன், காவல்துறையினர்
உத்தியோகத்தர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின்
வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். மாவட்ட வேட்பாளர் மற்றும் காவல்துறை இடையில் கலந்துரையாடல் | Jaffna District Candidates And Police Meeting

யாழ். மாவட்ட வேட்பாளர் மற்றும் காவல்துறை இடையில் கலந்துரையாடல் | Jaffna District Candidates And Police Meeting

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்