இலங்கை தேர்தல் ஆணையம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களுக்கு குறிப்பிட்ட செலவு வரம்புகளை நிர்ணயித்துள்ளது.
2023 இல 03 எனும் தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் பிரிவின் பிரகாரம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக செலவி முடியுமான செலவு எல்லைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பிரசார செலவினங்கள் அடங்கிய செலவின விபரத் திரட்டுகள்
அத்துடன் தேர்தல் பிரசார செலவினங்கள் அடங்கிய செலவின விபரத் திரட்டுகள் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 21 நாட்களுக்குள் அத்தாட்சிப்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்படவேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரியநேத்திரன் உட்பட மூவர் தமது செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.