ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹியா சின்வார் கொல்லப்பட்டு இரண்டு தினங்கள் கூட கழியாத நிலையில் லெபனானில் தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பிரதி தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல்(israel) இராணுவம் அறிவித்துள்ளது.
தெற்கு லெபனானின்(lebanon) பின்ட் ஜபெய்ல் பகுதியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் துணைத் தளபதியான
நாசர் அபேத் அல்-அஜிஸ் ரஷித்(Naser Abed al-Aziz Rashid) கொல்லப்பட்டதாக சனிக்கிழமை(19) காலைவேளை இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல்
இஸ்ரேலிய குடிமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய நபராக இருந்தவர் என இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.
தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது உள்கட்டமைப்புகளுக்கு எதிராக தமது படையினர் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் அங்கு அவர்கள் ஏராளமான ஆயுதங்களை வெற்றிகரமாக அழித்ததாகவும் இஸ்ரேல் படைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மௌனம் காக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு
எனினும் தமது பிரதி தலைவர்
கொல்லப்பட்டது தொடர்பாக ஹிஸ்புல்லா கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.