பொதுத் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமராக தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ‘
குறுகிய அமைச்சரவை
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,
எதிர்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படப் போகின்றன.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 25 உறுப்பினர்களுக்குள் மட்டுப்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் டிசம்பரில் முன்வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.