முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய மானிய உதவியின் கீழ் பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைவு

Courtesy: Sivaa Mayuri

இந்திய மானிய உதவியின் கீழ், இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கான STEM பாடங்களான அறிவியல், பொறியியல், விஞ்ஞானம், கணிதத்துறைகளின் 3 மாத கால ஆசிரியர் பயிற்சித் திட்டம் நிறைவு பெற்றுள்ளது.

நிறைவு விழா அண்மையில் சுற்றுச்சூழல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல், தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர உட்பட்டவர்கள் பங்கேற்றதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

19 இந்திய ஆசிரியர்கள்

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்ட இந்த திட்டமானது, நாட்டிலுள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களுக்கு STEM பாடங்களில் பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

இந்திய மானிய உதவியின் கீழ் பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைவு | Plantation School Teachers Indian Grant Aid

இந்திய வம்சாவளி தமிழ் சமூகம் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 750 மில்லியன் இந்திய மானிய உதவியின் கீழ் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், இலங்கையின் ஆசிரியர்களுக்கு பாடங்களில் பயிற்சி அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 19 இந்திய ஆசிரியர்கள் 2024 ஜூலையில் இலங்கை வந்தடைந்தனர்.

இந்திய மானிய உதவியின் கீழ் பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைவு | Plantation School Teachers Indian Grant Aid

இந்தநிலையில் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சுமார் 40 மையங்களில் நடத்தப்பட்ட இந்த 10 வார பயிற்சியின்போது, 2000க்கும் மேற்பட்ட இலங்கை ஆசிரியர்கள் பயனடைந்தனர் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்