முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜேவிபி ரில்வின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் பதிலடி

அதிகார பகிர்வு தேவை இல்லை என தெரிவித்த ஜேவிபியின் (JVP) பொது செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்து தமிழர்களுக்கு வழங்கப்பட்ட முதலாவது அடி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (20.10.2024) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,  “சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மைகள் கிடைக்கக் கூடாது என்பதற்காக, அதனை எதிர்த்து கொழும்பை (Colombo) முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணியினர்.

பின்னணியில் மாற்றம்

அண்மைய தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

ஜேவிபி ரில்வின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் பதிலடி | Jvp Tilvin Silva Opinion Sivajilingam Angry

இந்த பின்னணியில் மாற்றம் ஒன்று வரும் என நம்பியவர்களுக்கு, அந்த கட்சியினுடைய பொது செயலாளர் ரில்வின் சில்வா தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை என கூறுகின்றார்.

பொருளாதார ரீதியாகத்தான் பிரச்சினை இருக்கிறது என்று கூறுகின்றார். இளையோர் இதைப்பற்றி கவலைப்படவில்லை.

இந்த பின்னணியிலே தான் அவருடைய அமைச்சரவையில் இருக்கக் கூடிய அமைச்சர்கள் தெரிவிக்கக் கூடிய கருத்துக்கள் அனைத்தும், ஜனாதிபதியின் கருத்துக்கள் தான் என்றும் எம். கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை 

இதேவேளை, வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் (Janatha Vimukthi Peramuna) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) கடந்த வாரம் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி ரில்வின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் பதிலடி | Jvp Tilvin Silva Opinion Sivajilingam Angry

தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றன என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் இந்த கருத்தானது தமிழ் மக்களாலும் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் விமர்சனத்தையும் கண்டனக்குரலையும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.